• Tag results for RR

ஐந்து பைசா முதல் 1000 ரூபாய் வரை இந்திய நாணய ஞாபகங்கள்!

நாணயங்கள் சேகரிப்பு என்பது சிலருக்கு மிக ஆத்மார்த்தமான பொழுதுபோக்கு. ரிசர்வ் வங்கி புது நாணயங்களை வெளியிடும் போதெல்லாம் அதை மிகச்சரியாக கவனித்து நாணயங்களைச் சேகரிப்பதை நுட்பமான கலையாகக் கருதுகிறார்கள் அவர்கள்.  சிலருக்கு உள்நாட்டு நாணயங்கள் மீதும், சிலருக்கு தாங்கள் சென்று வந்த வெளிநாடுகளின் நாணயங்களின் மீதும் பிரேமை இருக்கலாம். எப்படியானாலும் இது ஊக்குவிக்கப்பட வேண்டிய ஆர்வம் என்பதில் ஐயமில்லை. 

published on : 6th November 2019

பிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய் 

பிகில் ஆடியோ லான்ச்சில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய் 

published on : 23rd September 2019

‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!

சீன வல்லரசின் அடக்குமுறை மற்றும் ஆள்தூக்கி சட்ட மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாகப் புரட்சி நடைபெற்று வருகிறது. வல்லரசின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட மறுக்கும் ஹாங்காங் மக்கள் பகலிரவாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியைத் தடுக்க வகையறியாது தடுமாறி நிற்கிறது வல்லரசு சீனா...

published on : 5th August 2019

ரோல்ஸ் ராய்ஸ் டான்

உறுதி, இலகு, ஆற்றல் தொழில்நுட்ப  அடிப்படையை கொண்டு பார்க்கையில், இந்த கார் 6.6 லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12 என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp என்ற அளவிலான சக்தியையும் 780Nm என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது. இந்த அபார சக்தி 0  - 100 kmph வேகத்தை வெறும் 4.9  நொடிகளில் அடைந்து அதிகபட்சமாக மணிக்கு 250கிலோ மீட்டர் ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.ஸ்ஃபாட் டாப் கூரையானது மிக இயல்பாக மடங்கி விரியும் வகையில் அமைந்துள்ளது. காரின் முகப்பு விளக்கில் RR என ரோல்ஸ்ராய்ஸ் லோகோ எல்.இ.டி கொண்டு மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர்.

published on : 30th July 2019

குடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரப்பட்டது. குடிநீரை சென்னைக்கு விநியோகம் செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி. பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்டோர்.

published on : 13th July 2019

புல்வாமா தாக்குதல்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர், பலர் கவலைக்கிடமான நிலையில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளையும் உலுக்கியுள்ளது. 

published on : 16th February 2019

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள்

கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன.  தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம், காளகஸ்திநாதபுரம், கீழையூர், ஆக்கூர், சங்கரன்பந்தல் ஆகிய பகுதிகளில் சம்பா நடவு செய்யப்பட்டு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

published on : 18th November 2018

தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தீபிகா படுகோனே சார்பில், வரும் 21ஆம் தேதி பெங்களூருவில் வரவேற்பு நிகழ்ச்சியும், அதன் பின் ரன்வீர், தீபிகா இருவரும் இணைந்து திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

published on : 15th November 2018

புதுவை விடுதலை தினம்

1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பிரெஞ்சு ஆட்சியின் கீழ் விடுதலை பெற்று புதுவை மாநிலம் இந்தியாவோடு இணைந்ததை, முன்னிட்டு புதுவை அரசு ஒவ்வொரு ஆண்டும் விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது. இதையெட்டி கடற்கரைச் சாலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படங்கள் உதவி: ஸ்ரீரஞ்ஜனி

published on : 4th November 2018

ஃபிளாரன்ஸ் புயல்

அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள சக்தி வாய்ந்த 'ஃபிளாரன்ஸ்' புயல்' கரையைக் கடக்கும்போது, மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "பல ஆண்டுகள் கழித்து கிழக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கவிருக்கும் மிக மோசமான புயல் இது' என்று குறிப்பிட்டிருந்தார்.

published on : 14th September 2018

காதலியை மணந்தார் டேனி

ஏ.கே சரவணன் இயக்கத்கில் மரகத நாணயம் படத்தின் மூலம் பிரபலமானர் நடிகர் டேனி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் டேனி பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் டேனி தனது காதலியான குட்டுவை ரெஜிஸ்டர் திருமணம் செய்தார். கணவன், மனைவியாக நாங்கள் புது வாழ்வை துவங்கும் நேரத்தில் உங்களின் ஆசியை கோருகிறோம் என்று டேனி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

published on : 8th September 2018

தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம்

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3ஆம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கியது. இதன் காரணமாக ஏராளமான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன,  போராட்டம் நீடிப்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

published on : 21st July 2018

துரியோதனா

திரில்லர் பட வரிசையில் புதியவர்களின் நடிக்கும் படம் 'துரியோதனா'.  பிரதோஷ், வினுராகவ் கதாநாயகர்களாக நடித்து உள்ளனர். சின்னத்திரை நவ்யா சாமி நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷில்பாவும் நடித்துள்ளார்.

published on : 13th July 2018

ப்ரியா பிரகாஷ் வரியர்

சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் வரும் ப்ரியா பிரகாஷ் வரியர் ஸ்டில்ஸ்.

published on : 15th February 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை