கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.217 கோடி

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி நான்காம் காலாண்டில் ரூ.217.56 கோடி லாபம் ஈட்டியது.
கரூர் வைஸ்யா வங்கி லாபம் ரூ.217 கோடி
Published on
Updated on
1 min read

தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி நான்காம் காலாண்டில் ரூ.217.56 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் கரூர் வைஸ்யா வங்கி ரூ.1,665.23 கோடி வருவாய் ஈட்டியது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.1,536.30 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.138 கோடியிலிருந்து 57.6% உயர்ந்து ரூ.217.56 கோடியானது.
சென்ற முழு நிதி ஆண்டில் வருவாய் ரூ.6,150.21 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,404.57 கோடியாகவும், நிகர லாபம் ரூ.567.63 கோடியிலிருந்து 6.75% உயர்ந்து ரூ.605.98 கோடியாகவும் இருந்தது என்று கரூர் வைஸ்யா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com