

பிரிட்டானியா நிறுவனத்தின் புதிய ரக குட் டே ஒண்டர்ஃபுல்ஸ் பிஸ்கட் சென்னையில் வியாழக்கிழமை அறிமுகமானது.
இந்தப் புதிய ரக பிஸ்கட்டை நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் அலி ஹாரிஸ் ஷேர் அறிமுகப்படுத்திக் கூறியதாவது: 'சாக்கோ நட்ஸ்', வெண்ணெய் பாதாம், 'பெர்ரீஸ் மற்றும் நட்ஸ்' ஆகிய 3 வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் கட்டமாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 3 வகைகளும் 30 கிராம் (ரூ.10), 75 கிராம் (ரூ.25) பேக்குகளில் கிடைக்கும். பிரிட்டானியாவின் மொத்த வர்த்தகத்தில் தமிழகத்தின் பங்கு 20 சதவீதத்துக்கும் அதிகமாகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.