

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 6.19 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் ரூ.8,969 வருவாய் ஈட்டியது. இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.8,430 கோடியுடன் ஒப்பிடும்போது இது 6.39 சதவீதம் அதிகமாகும்.
நிகர லாபம் ரூ.1,114 கோடியிலிருந்து 6.19 சதவீதம் உயர்ந்து ரூ.1,183 கோடியாக காணப்பட்டடது.
சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் வருவாய் ரூ.35,039 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.36,128 கோடியாகவும், லாபம் ரூ.4,151 கோடியிலிருந்து 8.16சதவீதம் உயர்ந்து ரூ.4,490 கோடியாகவும் இருந்தது.
சென்ற நிதி ஆண்டுக்கு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 இறுதி ஈவுத்தொகையாக வழங்க முடிவெடுக்கப்பட்டது என்று ஹிந்துஸ்தான் யுனிலீவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.