டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஜி 5 கேமிங் டெஸ்க்டாப்

கணிப்பொறி தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் டெல் நிறுவனம் ஜி 5 எனப்படும் புதிய கேமிங் டெஸ்க்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல் ஜி 5
டெல் ஜி 5

சென்னை: கணிப்பொறி தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் டெல் நிறுவனம் ஜி 5 எனப்படும் புதிய கேமிங் டெஸ்க்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல் நிறுவனமானது ஜி 5 எனப்படும் புதிய கேமிங் டெஸ்க்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  டெஸ்க்டாப்பானது டெல் நிறுவனத்தின் தேர்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் இணையதளம் வாயிலாக விற்பனைக்கு கிடைக்கிறது.

டெல் நிறுவனத்தின் ஜி வரிசை மேசை கணிப்பொறிகளில் இதுவே முதல் கேமிங் டெஸ்க்டாப் ஆகும். தடையில்லா விடியோ கேம் விளையாடும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது அத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது நொடிப்பொழுதில் எதிர்வினையாற்றும் வகையில் இதன் செயல்திறன் அமைந்துள்ளது.

இதன் மூலம் ஆன்லைன் விளையட்டுக்களை எல்லையில்லா வேகத்துடன் விளையாடுவதுடன் தடையில்லா இணைப்பையும் பெற்று மகிழ முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com