இந்திய சந்தையில் ஹுவாமி அறிமுகப்படுத்தும் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் வாட்சுகள்

உலகப்புகழ் பெற்ற ஜியோமி நிறுவனத்தின் உப நிறுவனமான ஹுவாமி இந்திய சந்தையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹுவாமி ஸ்மார்ட் வாட்சுகள்
ஹுவாமி ஸ்மார்ட் வாட்சுகள்

சென்னை: உலகப்புகழ் பெற்ற ஜியோமி நிறுவனத்தின் உப நிறுவனமான ஹுவாமி இந்திய சந்தையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹுவாமி  நிறுவனமானது இந்திய சந்தையில் அமாஸ்பிட்  ஜிடிஆர் 47 மிமீ (டைட்டானியம் வகை) மற்றும் அமாஸ்பிட் 42 மிமீ  (க்ளிட்டர் வகை) என இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் அமாஸ்பிட்  ஜிடிஆர் 47 மிமீ (டைட்டானியம் வகை) வாட்ச்சானது 24 நாட்கள் பேட்டரி காலம் மற்றும் 1.39 இன்ச் அமோலாய்ட் டிஸ்பிலே கொண்டாதாக அமைநதுள்ளது.

அதேநேரம் அமாஸ்பிட் 42 மிமீ  (க்ளிட்டர் வகை) வாட்ச்சானது 12 நாட்கள் பேட்டரி காலம் மற்றும் 1.20 இன்ச் அமோலாய்ட் டிஸ்பிலே கொண்டாதாக அமைநதுள்ளது. 

ஸ்மார்ட்போனில் இருக்கக் கூடிய வழக்கமான வசதிகளுடன் இந்த வாட்சுகளில் உடனடி காலநிலை அறிவிப்புகள், இசை கேட்கும் வசதி மற்றும் காம்பஸ் கருவி உள்ளிட்ட கூடுதல்  வசதிகள் அமைந்துள்ளன.

இந்திய சந்தையில் முறையே ரூ. 14, 999 மற்றும் ரூ. 12, 999 நிர்ணையிக்கப்பட்டுள்ள இந்த வாட்சுகள் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com