முதல் ஆண்டிலேயே 1.5 கோடி கைபேசிகளை விற்று சாதனை படைத்த ரியல்மி

ரியல்மி தனது முதல் ஆண்டிலேயே 1.5 கோடி கைபேசியை விற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணியத்துள்ளது.
முதல் ஆண்டிலேயே 1.5 கோடி கைபேசிகளை விற்று சாதனை படைத்த ரியல்மி


புது தில்லி: ரியல்மி தனது முதல் ஆண்டிலேயே 1.5 கோடி கைபேசியை விற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 2020 ஆம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணியத்துள்ளது.

சீன கைபேசி தயாரிப்பான ரியல்மி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக மாறியுள்ளது, அது வர்த்தகத்துக்கு வந்து முதல் ஆண்டில் 1.5 கோடி கைபேசிகளை விற்பனை செய்துள்ளது. அடுத்த ஆண்டு விற்பனையை இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் கூறினார்.

மே 2018 இல் ஒப்போவின் துணை பிராண்டாகத் தொடங்கிய ரியல்மி, வர்த்தகத்தின் ஆரம்பத்திலேயே ஒரு முழுமையான நிறுவனமாக மாற்றப்பட்டு, இப்போது பெரிய போட்டியாளரான சியோமியை எதிர்கொண்டு, 7,000-20,000 ரூபாய் வரையிலான கைபேசிகளின் விற்பனையில் முன்னேறி வருகிறது.

சேனல் மார்க்கெட்டிங் மற்றும் ஆஃப்லைன் விநியோகத்தில் முதலீடு செய்து ஆஃப்லைனில் கவனம் செலுத்துகின்ற விவோ மற்றும் ஒப்போ போன்ற பிற சீன நிறுவனங்களைப் போலல்லாமல், ரியல்மி சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து, தொடக்கத்தில் இருந்தே ஆன்லைனில் கவனம் செலுத்தியது.

ரியல்மி உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் ஏழாவது இடத்தில் உள்ளது என்று ஷெத் கூறியுள்ளார்.

"எங்கள் வர்த்தகத் துவக்கத்தின் முதல் ஆண்டான 2019ஐ 1.5 கோடிகைபேசிகளின் விற்பனையுடன் நிறைவு செய்வோம். 2020 ஆம் ஆண்டில் இதை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நாங்கள் இலக்கு வைத்துள்ளோம், ”என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com