சிறந்த, தரமான புகைப்படங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 12ல் புதிய தொழில்நுட்பம்

4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் கொண்ட ஐபோன் 12 போனின் 6 மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 
சிறந்த, தரமான புகைப்படங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 12ல் புதிய தொழில்நுட்பம்

ஆப்பிள் ஐபோன்கள் என்றாலே அதற்கு ஒரு தனி மவுசு தான். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், ஐபோன் 12 மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் கொண்ட 6 மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக நிறுவனத் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

மொபைல் சேவையில் 4ஜியைத் தொடர்ந்து தற்போது சீனா உள்ளிட்ட நாடுகளில் 5ஜி தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இந்தியாவிலும் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் பல அறிமுகமாக உள்ளன. இதில் ஐபோன் 12ம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

5ஜி வேரியண்ட்டுடன் ஆப்பிள் ஐபோன் 12 வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புகைப்படத்திற்கென சென்சார்-ஷிப்ட்டிங் டெக்னாலஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரை பயன்படுத்தி சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். நீங்கள் நகரும் சூழ்நிலையில் இருந்தால் கூட, நிலையான புகைப்படங்களை வழங்கும். 

தற்போது, ​​ஐபோன் 11 ப்ரோ மாடல்கள் புகைப்படம் மற்றும் வீடியோ இரண்டிற்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்சார்-ஷிப்ட் தொழில்நுட்பம் இதைவிட சிறந்ததாக இருக்கும். எந்த குறிப்பிட்ட லென்ஸையும் சாராது தனித்து இயங்குவதால் சிறந்த தரமான புகைப்படங்களை உருவாக்கலாம். 

5.4 இன்ச் அளவில் ஒரு மாடல், 6.1 இன்ச் அளவில் இரண்டு மாடல்கள், 6.7 இன்ச் அளவில் ஒரு மாடல் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய போன்களை 2020ல் ஆப்பிள் அறிமுகப்படுத்த உள்ளது.  

இரண்டு உயர்நிலை மாடல்களில் (6.1-இன்ச் மற்றும் 6.7-இன்ச்) மில்லிமீட்டர் வேவ் அல்லது  3 டி சென்சிங், இரட்டை கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com