மத்திய, தென்கிழக்கு அமெரிக்காவில் ஆப்பிள் மேப்ஸ் செயலி அறிமுகம்

மத்திய, தென்கிழக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிள் மேப்ஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மத்திய, தென்கிழக்கு அமெரிக்காவில் ஆப்பிள் மேப்ஸ் செயலி அறிமுகம்



மத்திய, தென்கிழக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் ஆப்பிள் மேப்ஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொது போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு கூகுள் மேப்ஸ் செயலி பெரிதும் பயன்படுகிறது. மற்ற மேப்ஸ் செயலிகளை விட கூகுள் மேப்ஸ் செயலிக்கான பயனர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த நிலையில், ஆப்பிள் மேப்ஸ் செயலியும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சில பகுதிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும், கூகுள் மேப்ஸ் போல் அல்லாமல் மிகக்குறைந்த அளவிலேயே பயனர்கள் உள்ளனர். இதனால், ஆப்பிள் நிறுவனம், மிகவும் நவீன முறையில் அனைவரும் எளிதாக பயன்படுத்தும் நோக்கில் இதனை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. நடக்கும் போதோ அல்லது இருசக்கர வாகனம், கார்களில் பயணிக்கும் போதோ வழி காட்டுகிறது. இதுதவிர உபெர் மற்றும் ஓலா போன்றவற்றில் இருந்து கார் முன்பதிவு செய்யும் வசதியும் வழங்குகிறது.

ஆப்பிள் மேப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இதனை மேலும் சில பகுதிகளுக்கு விரிவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆப்பிள் இன்க் மத்திய மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் வரைபடங்களை உருவாக்கியுள்ளது. ஐபோன் தயாரிப்பாளரால் சேகரிக்கப்பட்ட தரவை மட்டுமே பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளதால் மிகவும் துல்லியமாக இருக்கும். மிகவும் விரிவான அம்சங்களைக் கொண்டுள்ளது

ஜூன் 2018 இல், iOS 12 பீட்டா வெர்ஷனில் இது சான் பிரான்சிஸ்கோ மற்றும் பே ஏரியா(bay area) பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய மற்றும் தென் கிழக்கு அமெரிக்காவைத் தொடர்ந்து வடக்கு கலிபோர்னியாவிலும் விரிவாக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com