ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் உயர் ரக கேமிங் கணினி

2020-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஈ-ஸ்போர்ட்ஸ்-சென்ட்ரிக் ஹை-எண்ட் கேமிங் மேக்கை வெளியிடத் திட்டமிட்டுள்ளது
ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் உயர் ரக கேமிங் கணினி

ஆப்பிள் நிறுவனம் ஈ-ஸ்போர்ட்ஸ்-சென்ட்ரிக் ஹை-எண்ட் கேமிங் மேக்கை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது

தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது. ஆப்பிள் 2020 ஆம் ஆண்டில் அதன் வருடாந்திர டபிள்யுடபிள்யுடிசி டெவலப்பர்கள் மாநாட்டில், ஈ-ஸ்போர்ட்ஸ்-சென்ட்ரிக் ஹை-எண்ட் மேக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது ஆப்பிள். இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரா அல்லது உயர்ரக மேக்புக் ப்ரோவாக இருக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இது ஐமாக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இந்தப் பிரிவில் நுழைவது இதுவே முதல் முறையாகும்.  தகவல்களின்படி, இது பெரியதிரை மடிக்கணினியாக இருக்கலாம் அல்லது ஆல் இன் ஒன் டெஸ்க்டாப்பாக இருக்கலாம்.  இதன் விலை 5,000 டாலர்கள் வரை இருக்கும்.

ஆப்பிள் இந்த ஆண்டு கேமிங் துறையில் தீவிரமாக நுழைந்துள்ளது. செப்டம்பர் மாதம் iOS 13-இன் வருகையுடன், ஆப்பிள் ஆர்கேட் கேம் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியது. ரூ .99 க்கு இந்தியாவில் கிடைக்கும் இந்தச் சேவை ஐபோன்கள், ஐபாட்கள், ஆப்பிள் டிவி மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்கிறது. ஒரே சந்தாவை ஒரு மாத கட்டணத்தில் ஆறு குடும்ப உறுப்பினர்கள் வரை பகிர்ந்து கொள்ள இது அனுமதிக்கிறது.

ஆப்பிள் புதுப்பிக்கப்பட்ட 11 மற்றும் 12.9 அங்குல ஐபாட் புரோ மாடல்களிலும் ஐபோன் 11 ப்ரோ ஸ்டைல் டிரிபிள் லென்ஸ் கேமராக்களைக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com