ஏழு மாநிலங்களில் பேஸ்புக் நடத்தும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம்

டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 
ஏழு மாநிலங்களில் பேஸ்புக் நடத்தும் டிஜிட்டல் கல்வியறிவு திட்டம்

டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை இந்தியாவின் ஏழு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் டிஜிட்டல் கல்வியறிவு குறித்த தனது 'வீ திங்க்' என்ற திட்டத்தை தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) மற்றும் சைபர் அமைதி அறக்கட்டளையுடன் இணைந்து அறிமுகப்படுத்தியது

இந்த திட்டத்தின்படி, இந்தயாவில் ஏழு மாநிலங்களில் டிஜிட்டல் கல்வியறிவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து தொடங்கி, அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் பிகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெறும். 

டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் குடியுரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இதில் பயிற்சி பெற உள்ளனர். 

மேலும், 'பெண்களை டிஜிட்டல் துறையில் ஈடுபட வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகிறோம். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், ஆன்லைன் அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவுகிறோம். கற்றல் செயல்முறையில் முறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பயிற்சி பயன்படும்' என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் தலைவர் ரேகா சர்மா தெரிவித்தார்.

'தற்போதைய யுகத்தில் மாற்றத்திற்கான ஒரு இயங்குதளமாக இணையம் மாறிவிட்டது. இந்த பயிற்சி உத்தரப்பிரதேச பெண்களுக்கு பல துறைகளில் வாய்ப்பளிக்கும். மேலும், பேஸ்புக்கோடு சேர்ந்து மக்களை தெளிவு படுத்தவும், கல்வியை வழங்கவும் விரும்புகிறோம். மக்களிடையே, முக்கியமாக பெண்களிடையே சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த உதவுவோம்' என்று அம்மாநில பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com