காதல் கெளபாய் ஈமோஜியை இப்படி உருவாக்கலாம்: அறிமுகப்படுத்துகிறது கூகுள்

ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்ட் "ஈமோஜி கிச்சன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
கெளபாய் ஈமோஜி
கெளபாய் ஈமோஜி

ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்ட் "ஈமோஜி கிச்சன்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இது பயனர்கள் வெவ்வேறு ஈமோஜிகளை மாஷ் அப் செய்ய அனுமதிக்கும் அதன்பின் தகவலை அனுப்பும்போது அவற்றை ஸ்டிக்கர்களாகப் பயன்படுத்தலாம்.

"உங்கள் ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் ஜிபோர்டைப் பயன்படுத்துவதன் மூலம், எந்தவொரு ஸ்மைலி ஈமோஜியையும் தட்டினாலும், ஈமோஜி கிச்சன் கூகுள் வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல ஸ்டிக்கர்களை வெளிப்படுத்தும். எனவே நீங்கள் ஒரு கெளபாய் தொப்பி ஈமோஜியின் முகத்தைத் தட்டும்போது - வாவ், இப்போது உங்கள் திரையில் குரங்கு கெளபாய் வெளிப்படும், போலவே பேய் கெளபாய், சிரிக்கும் கெளபாய், முத்தமிடும் கெளபாய், காதல் கெளபாய், என வெவ்வேறு கெளபாய் உருவங்கள் வெளிப்படும்." என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜிமெயில், கூகுள் செய்திகள், மெஸஞ்சர், ஸ்னாப்ஷாட், டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற பயன்பாடுகள் முழுவதிலும் இந்த ஸ்டிக்கர்கள் செயல்படும்.

"ஈமோஜிகள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன, பயனர்கள் மகிழ்ச்சியான குறியீடுகளையும், மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த வார்த்தைகள் மற்றும் ஈமோஜிக்களையும் ஒன்றிணைத்து உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக மாற்றுவது, முற்றிலும் புதிய கருத்துக்களை உருவாக்குவதற்காகவும் ஈமோஜிக்கள் பயன்படுகின்றன" என்று நிறுவனம் மேலும் கூறியது.

இந்தப் புதிய ஈமோஜி ஸ்டிக்கர் பேக்கில் டெவலப்பர் மேக்சென்ஸ் கியூக்னொல்லே உருவாக்கிய 40 ஈமோஜி சேர்க்கைகள் உள்ளன என்பது குறிபிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com