ரியல்மி சி3 விற்பனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு!

ரியல்மி சி3 போன் விற்பனை ரியல்மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
ரியல்மி சி3 விற்பனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு!

பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, தனது புதிய தயாரிப்பான ரியல்மி சி3-யை இந்தியாவில் அறிமுகம்  செய்துள்ள நிலையில் அதன் விற்பனை பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

ரியல்மி தயாரிப்புகளில் ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ரியல்மி சி2 நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் அடுத்த வெர்ஷனாக ரியல்மி சி3 இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில், ரியல்மி சி3, 3ஜிபி+ 32 ஜிபி -விலை ரூ. 6999, 4ஜிபி+ 64 ஜிபி-யின் விலை ரூ.7,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

6.5 அங்குல டிஸ்ப்ளே, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 12 மெகாபிக்சல் மெயின் ஷூட்டர் மற்றும் எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட இரட்டை கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. 

ரியல்மி சி3 பிப்ரவரி 14ம் தேதி முதல் ரியல்மி டாட் காம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வந்தது. தொடர்ந்து, வடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்குறிப்பிட்ட தளங்களில் விற்பனையானது பிப்ரவரி 21ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com