புதிய அம்சத்துடன் களமிறங்கும் ஓப்போ, விவோ மற்றும் ஸியோமி ஸ்மார்ட்போன்கள்!

ஓப்போ, விவோ மற்றும் ஸியோமி நிறுவன ஸ்மார்ட் போன்களில் வயர்லெஸ் முறையில் ஆவணங்களை பரிமாறும் புதிய அம்சம் இடம்பெறவுள்ளது
புதிய அம்சத்துடன் களமிறங்கும் ஓப்போ, விவோ மற்றும் ஸியோமி ஸ்மார்ட்போன்கள்!

ஓப்போ, விவோ மற்றும் ஸியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் முறையில் ஆவணங்களை பரிமாற்றம் செய்யும் புதிய அம்சம் இடம்பெறவுள்ளது.

தற்போதைய நவீன கால கட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலத்திற்கேற்ப ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைந்து வருவதால் அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர்.

இதனால், தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களுடன் நவீன ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. அந்தவகையில், ஓப்போ, விவோ மற்றும் ஸியோமி நிறுவன ஸ்மார்ட் போன்களில் வயர்லெஸ் முறையில் ஆவணங்களை பரிமாற்றம் செய்யும் புதிய அம்சம் இடம்பெறவுள்ளது. இணைய வசதி இல்லாமலே ஆவணங்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. பியர்-டு-பியர் டிரான்ஸ்மிஷன்(Peer-Peer trasmission) தொழில்நுட்பத்தில் இணைய வசதியின்றி ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு ஆவணங்களை அனுப்ப முடியும். இதன்மூலமாக நெட்ஒர்க் டேட்டா வீணாவது குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூடூத் லோ எனர்ஜி (Bluetooth Low Energy)யைப் பயன்படுத்தி போனில் ஸ்கேன் செய்தும், பியர்-டு-பியர் டிரான்ஸ்மிஷன் வைஃபை-யை பயன்படுத்தியும் எந்த ஒரு மொபைலுக்கும் ஆவணங்களை அனுப்பலாம். வழக்கமாக போனில் இருக்கும் ப்ளூடூத்தை விட இது வேகமாக செயல்படும். இது சராசரியாக 20MB/s வேகத்துடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com