வாசகர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பும் கூகுள்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் செய்தி பயன்பாட்டில் இதழ்களின்(Magazine) 'அச்சு பிரதி' ( PDF)களை நிறுத்த முடிவு செய்துள்ளது.
வாசகர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பும் கூகுள்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் செய்தி பயன்பாட்டில் இதழ்களின்(Magazine) 'அச்சு பிரதி' ( PDF)களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

கூகுள் செய்தியின் இணைப்பு இதழ்களான ரோலிங் ஸ்டோன்(Rolling Stone) அல்லது கான்டே நாஸ்ட் டிராவலர்(Conde Nast Traveller) உள்ளிட்ட இதழ்களின் ஆன்லைன் அச்சுப்பிரதிகளை குறைவான சந்தாதாரர்களே படிப்பதனால், அதனை நிறுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், சந்தாதாரர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க முடிவு செய்து, அதுதொடர்பாக பயனர்களுக்கு நிறுவனம் தரப்பில் இருந்து மின்னஞ்சல் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூகுளின் ஆண்ட்ராய்டு போலீஸ் கிளை தெரிவித்துள்ளது.

கூகுள் செய்திகளில் உள்ள ஆன்லைன் பி.டி.எப் அச்சு பிரதிகளை  ஸ்மார்ட் போன்கள்  அல்லது டெஸ்க்டாப்பில் படிக்க இயலும். ஆனால், இனிமேல் அச்சுப்பிரதி வடிவத்தில் ஸ்மார்ட்போன்களில் படிக்க இயலாது. அதே நேரத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படிக்க இயலும் என்று கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது. தற்போது கூகுள் செய்தியின் இதழ்களின் பி.டி.எப் பிரதிகள் வெளியீடு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com