2020ல் 20 கோடி 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: அமெரிக்க நிறுவனம் கணிப்பு

உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 20 கோடி 5ஜி தொலைபேசி விற்பனை ஆகும் என அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது
2020ல் 20 கோடி 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை: அமெரிக்க நிறுவனம் கணிப்பு


உலகளவில் 2020 ஆம் ஆண்டில் 20 கோடி 5ஜி தொலைபேசி விற்பனை ஆகும் என அமெரிக்க நிதிசேவை நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது.
 
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்(Goldman Sachs) நிறுவனம் வருகிற 2020ஆம் ஆண்டில் உலகளவில் 20 கோடி 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியாகும் என்று கணித்துள்ளது. இந்நிறுவனம் கணித்த மதிப்பு 2019ஆம் ஆண்டின் விற்பனை எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு சீனாவில் சுமார் 1 மில்லியன் புதிய 5ஜி அடிப்படைத் தளங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோல்ட்மேன் சாக்ஸின் கணிப்பை விட அதிகம். கூடுதலாக, சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஸியோமி இணை நிறுவனர் லீ ஜுன் கூறுகையில், நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ஜி, ஏ.ஐ மற்றும் ஐ.ஓ.டி ஆகிய தொழில்நுட்பத்தில் 7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் ஏ.ஐ இணையத் தொழில்நுட்பங்கள் நவீன காலகட்டத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. ஸ்மார்ட் உலகில் இதனை நாம் முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் லீ கூறினார்.

மேலும், ஸியோமி சந்தையில் ஹவாய் நிறுவனத்துடன் கடுமையான போட்டியில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு ஸியோமியின் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com