Enable Javscript for better performance
பயனாளர்களின் விவரங்களை திருடும் டின்டெர், கிரிண்டெர் ஆப்ஸ்- Dinamani

சுடச்சுட

    

    பயனாளர்களின் விவரங்களை திருடும் டின்டெர், கிரிண்டெர் ஆப்ஸ்

    By DIN  |   Published on : 17th January 2020 03:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    apps


    நார்வேயைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வில் சுமார் 10 விதமான செயலிகள், பயனாளர்களுக்கே தெரியாமல் அவர்களது விவரங்களைத் திருடி டிஜிட்டல் சந்தை நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகக் கூறியுள்ளது.

    அது வெளியிட்டிருக்கும் பட்டியலில், டேட்டிங் செயலியான டின்டெர், கிரிண்டெர், மாதவிலக்கை கணக்கிடும் க்ளூ, மைடேய்ஸ், மேக்கப் செயலியான பர்ஃபெக்ட், மத செயலி முஸ்லிம், குழந்தைகளுக்கான செயலி மை டால்கிங் டாம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட செல்போன் செயலிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்த செயலிகளை வைத்திருக்கும் பயனாளர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் திருடி, டிஜிட்டல் சந்தை நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றன.

    நமது தகவல்கள் திருடப்படாமல் இருக்க ஒரே வழி என்னவென்றால், இதுபோன்ற செயலிகளை செல்போனில் டவுன்லோடு செய்யாமல் இருப்பதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai