கத்தரிக்கோல் வடிவத்தில் ஸ்மார்ட் கீபோர்ட் அறிமுகம்: ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்

ஆப்பிள் அதன் அடுத்த தலைமுறை ஐபாட் மற்றும் ஐபாட் புரோ மாடல்களுடன் 2020-ஆம் ஆண்டில்
கத்தரிக்கோல் வடிவத்தில் ஸ்மார்ட் கீபோர்ட் அறிமுகம்: ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்

ஆப்பிள் அதன் அடுத்த தலைமுறை ஐபாட் மற்றும் ஐபாட் புரோ மாடல்களுடன் 2020-ஆம் ஆண்டில் கத்தரிக்கோல் சுவிட்ச் வடிவமைப்புடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் புதிய மாடலில் கத்தரிக்கோல்-சுவிட்ச் கீபோர்ட் வடிவமைப்பை 2019-இன் இறுதியில் 16 அங்குல மேக்புக் ப்ரோவுடன் அறிமுகப்படுத்தினர். பிற மேக்புக்ஸும் 2020-ஆம் ஆண்டில் இந்த கீபோர்ட் வடிவமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2019-இல், பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ, ஐபாட் கீபோர்டுகள் 2020-21-ஆம் ஆண்டில் கத்தரிக்கோல் சுவிட்சுகளை விட, ரப்பர் டோம் வடிவமைப்பு சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறினார்.

2020 முதல் பாதியில் ஆப்பிள், பின்புற 3 டி சென்ஸிங் கொண்ட புதிய ஐபாட் புரோ மாடல்களை வெளியிடும் என்று குவோ சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஐபாட் புரோ மாடல்கள் பேக் கேமரா அமைப்பு மூலம் 3 டி சென்சிங்கைப் பெறும் என்று டிஎஃப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் உடனான ஆய்வுக் குறிப்பில் குவோ கூறினார்.

இந்த அறிக்கையின்படி, ஆப்பிள் டைம்-ஆஃப்-ஃப்ளைட் சிஸ்டம் முறையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு 3D வரைபடத்தை உருவாக்க ஒரு அறையில் உள்ள பொருட்களை ஒளிரச் செய்ய எடுக்கும் நேரத்தை அளவிடும்.

கூடுதலாக, ஆப்பிள் தனது குறைந்த விலை ஐபோன் "எஸ்இ 2" ஐ 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்றும் குவோ மேலும் கூறினார்.

ஐபோன் எஸ்இ 2 அதன் மதர்போர்டுக்கு 10-அடுக்கு சப்ஸ்ட்ரேட் போன்ற பிசிபி (எஸ்எல்பி) ஐப் பயன்படுத்தும், இது ஐபோன் 11-ல் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம்.

இந்த ஃபோன் ஐபோன் 8 ஐப் போலவே இருக்கும் என்று குவோ எதிர்பார்க்கிறார், மேலும் இது தற்போதுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் உரிமையாளர்கள் இதை அப்க்ரேட் செய்ய விரும்புவர் என்று நம்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com