இளைஞர்களின் ஐகான் ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி உள்நாட்டு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிராண்ட் போஆட்டின் பிராண்ட் தூதராக 'சவுண்ட் ஆஃப் தி சாம்பியன்ஸ்'
இளைஞர்களின் ஐகான் ஸ்ரேயாஸ் ஐயரின் புதிய அவதாரம்

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், முன்னணி உள்நாட்டு நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான போட்டின் (boAt) பிராண்ட் தூதராக இணைந்துள்ளார் என்று அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.  'சவுண்ட் ஆஃப் தி சாம்பியன்ஸ்' எனும் பிரச்சாரத்துடன் களம் இறங்கியுள்ளார் ஸ்ரேயாஸ்.

"இசை எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். என் எண்ணங்களை சமன்படுத்தவும்,  முக்கியமான விளையாட்டுக்களுக்கு முன்னால் சில சமயங்களில் படபடப்பைத் தடுக்கவும் மற்றும் ஓய்வாக இருக்கவும் இசைதான் எனக்கு பெரிதும் உதவுகிறது. உங்களுக்குப் பிடித்த இசையை நீங்கள் கேட்டு ரசிக்க, அந்த அனுபவத்தை மேம்படுத்த போட் பிராண்ட்தான் சரியான தேர்வாகும்’’ என்று 25 வயதான ஸ்ரேயாஸ் ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு, திறமையால் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஸ்ரேயாஸ், உடற்பயிற்சி மற்றும் இசை ஆர்வலர்களை இலக்காகக் கொண்ட தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார்.

"இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஸ்ரேயாஸின் இளமை ஆளுமை மற்றும் சுறுசுறுப்பு எங்கள் பிராண்டுடன் அருமையாக ஒத்துச் செல்கிறது. அவர் இளைஞர்களின் ஐகான், நாங்கள் அவருடன் வெற்றிகரமாகப் பணியாற்ற எதிர்பார்க்கிறோம்," என்று ஒரு அறிக்கையில் தெர்வித்தார் பிராண்ட் கோ- நிறுவனர் அமன் குப்தா.

இந்த பிராண்ட் முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களான கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷாப் பந்த், மற்றும் பிருத்வி ஷா உள்ளிட்டவர்களை பிராண்ட் தூதர்களாக ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com