இன்ஸ்டாகிராமில் இரு புதிய அம்சங்கள் சேர்ப்பு

வாட்ச் டுகெதர் மற்றும் சாட் தீம்ஸ் எனும் இரு சிறப்பு அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாட்ச் டுகெதர் மற்றும் சாட் தீம்ஸ் எனும் இரு சிறப்பு அம்சங்களை பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராமில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம், தனது மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் வாட்ச் டுகெதர் மற்றும் சாட் தீம்ஸ் எனும் இரு சிறப்பு அம்சங்களை புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 'வாட்ச் டுகெதர்' மூலமாக ஒரேநேரத்தில் அதிகபட்சமாக 6 பேர் இணைந்து ஒரு புகைப்படம் அல்லது விடியோவை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"போஸ்ட் மலோனின் செலிபிரிட்டி வேர்ல்ட் பாங் லீக்"(Post Malone's Celebrity World Pong League) மற்றும் "ஹியர் ஃபார் இட் வித் அவனி கிரெக்"(Here for It With Avani Gregg) ஆகிய இரண்டு புதிய தொடர்களை, வாட்ச் டுகெதர் மூலமாக மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு பிரத்யேகமாக கொண்டு வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

அதேபோன்று ;சாட் தீம்ஸ்'-இல் தனிப்பட்ட ஒருவருக்கு சாட் செய்யும்போது பின்புறத்தில் உள்ள தீம்களை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். 

மூன்றவதாக 'வானிஷ் மோடு' என்ற புதிய அம்சம் விரைவில் வரவுள்ளது. இதன்படி, சாட்டில் நீங்கள் அனுப்பும் செய்தியை எதிர்தரப்பு படித்தவுடன் செய்தி அல்லது புகைப்படம் தானாக அழிந்துவிடும். ஒரு சாட், பாதுகாப்பற்ற முறையில் உணரப்பட்டால் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது. இந்த வானிஷ் முறை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டில்  உள்ளது, விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com