ஓப்போ எப்17, எப்17 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது! சிறப்பம்சங்கள் என்னென்ன?

பிரபல ஸ்மார்ட் போன்  தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் எப்17, எப் 17 ப்ரோ என்ற புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
ஓப்போ எப்17
ஓப்போ எப்17

பிரபல ஸ்மார்ட் போன்  தயாரிப்பு நிறுவனமான ஓப்போ நிறுவனம் எப்17, எப் 17 ப்ரோ என்ற புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போனான(7.48 mm தடிமன்) ஓப்போ எப்17, செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி  மாலை 7 மணிக்கு அறிமுகமாகியுள்ளது. ஒன் பிளஸ் சீரிஸ் ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எப்17, எப் 17 ப்ரோ ஆகிய இரு மாடல்களுமே குறைந்த தடிமன், குறைந்த எடையுடன் மெட்டல் பூச்சில் வருவதால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளன. 

இதில் ஓப்போ எப்17 வருகிற செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது. எப் 17 ப்ரோ விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

ஓப்போ எப்17 சிறப்பம்சங்கள்:  

6.44 அளவு டிஸ்பிளே 

4+64 , 4+128 , 6+128 மற்றும் 8+128 ஜிபி சேமிப்பு வகைகளில் கிடைக்கும். விலை குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. 

ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 

4000mAh பேட்டரி திறன், பாஸ்ட் சார்ஜிங் வசதி 

16 எம்பி +8 எம்பி+2 எம்பி +2 எம்.பி பின்புற கேமரா, 16 எம்பி செல்பி கேமரா

உயரம் x அகலம் x தடிமன் முறையே 159.82 x 72.80 x 7.45

எடை: 163 கிராம் 

ஆரஞ்சு, நீலம் மற்றும் சில்வர் வண்ணங்களில் வருகிறது. 

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்

வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

ஓப்போ எப்17 ப்ரோ சிறப்பம்சங்கள்: 

6.43 அளவு சூப்பர் அமோல்டு டிஸ்பிளே, 8ஜிபி +128 ஜிபி சேமிப்பு அளவு. 

ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்

குவாட் ரியர் கேமரா அமைப்பு

4000mAh பேட்டரி திறன், பாஸ்ட் சார்ஜிங் வசதி 

48 எம்பி +8 எம்பி+2 எம்பி +2 எம்.பி பின்புற கேமரா, 16 எம்பி +2 எம்பி டூயல் செல்பி கேமரா

உயரம் x அகலம் x தடிமன் முறையே 160.1x73.8x7.48 

எடை: 164 கிராம் 

ஆரஞ்சு, நீலம் மற்றும் சில்வர் வண்ணங்களில் வருகிறது. 

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 95 சிப்செட்

வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com