இந்தியாவில் 'பப்ஜி லைட்' செயலி நிறுத்தம்!

பப்ஜி விளையாட்டின் மொபைல் பதிப்பான பப்ஜி லைட் சேவை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. 
பப்ஜி (கோப்புப்படம்)
பப்ஜி (கோப்புப்படம்)

பப்ஜி விளையாட்டின் மொபைல் பதிப்பான பப்ஜி லைட் சேவை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. 

பிரபல ஆன்லைன் மொபைல் விளையாட்டான பப்ஜிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நிரந்தரத் தடை விதித்தது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இது தடை செய்யப்பட்டது.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் பப்ஜிக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பப்ஜி நீக்கப்பட்டது. 

இந்நிலையில் பப்ஜி விளையாட்டின் குறைந்த இறுதி பதிப்பான மொபைலில் பயன்படுத்தக்கூடிய 'பப்ஜி லைட் சேவை' இந்தியாவில் அதிகாரபூர்வமாக  நிறுத்தப்பட்டது. 

பப்ஜி லைட் ரசிகர்களின் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்நிறுவனம் 'நியூ ஸ்டேட்' என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் ஒரு விளையாட்டை அறிமுகபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. ஆனால், இந்தியா அல்லாத மற்ற நாடுகளில் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவிலும் அந்நிறுவனம் மீண்டும் கால் பாதிக்க முயற்சிக்கலாம் என்று எண்ணப்படுகிறது. எனினும் அதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. 

உலகளவில் 60 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள், 5 கோடி நிரந்தர பயனர்கள் என சாதனை புரிந்த பப்ஜி இந்தியாவில் கிட்டத்தட்ட 3.3 கோடி  பயனர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com