புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: 56,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

சென்செக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக 56 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.
புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை: 56,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

சென்செக்ஸ் வரலாற்றில் முதன்முறையாக 56 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை அடைந்தது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) 55,792.27 புள்ளிகளுடன் முடிந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் புதன்கிழமை காலை 289 புள்ளிகள் அதிகரித்து 56,073 புள்ளிகளில் தொடங்கியது. அதிகபட்சமாக சென்செக் 56,118.57 என்ற புள்ளிகளை எட்டியது. தற்போது (10.50 மணி) 56,045.99 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

இதில் அதிகபட்சமாக ஹெச்.டி.எப்.சி வங்கி 1.8% அளவுக்கு வளர்ச்சி கொன்றுள்ளது. ஆக்சிஸ் வங்கி 06%, பஜாஜ் பின்செர்வ் 0.9%, எஸ்பிஐ லைப் 0.7% என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. 

இதையடுத்து, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வரலாறு காணாத அளவுக்கு 56 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. 

அதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிஃப்டி' 67 புள்ளிகள் அதிகரித்து, 16.681 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com