பங்குச்சந்தை வணிகம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் இன்று முடிவடைந்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்தன
பங்குச்சந்தை வணிகம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு
பங்குச்சந்தை வணிகம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு

பங்குச்சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400.34 புள்ளிகள் சரிந்து 51,703.83 புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.77 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 104.55 புள்ளிகள் சரிந்து 15,208.90 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.68 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் வெறும் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. மீதம் 22 நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன.

அதிகபட்சமாக நெஸ்ட்லே இந்தியா 2.80 சதவிகிதமும், பஜாஜ் பின்சர்வ் 2.61 சதவிகிதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 2.48 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 2.48 சதவிகிதமும் சரிவைச் சந்தித்தன.

எஸ்.பி.ஐ. வங்கி, பவர் கிரிட், என்டிபிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வர்த்தக நேர முடிவில் உயர்வுடன் காணப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com