ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் 'டார்க் மோட்' வசதி

ஆன்டிராய்டு செல்லிடப்பேசிகளில் இனி கூகுள் மேப்ஸ் டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இது 2020 செப்டம்பர் மாதம் முதல் சோதனை முயற்சியில் இருந்தது.
ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தில் டார்க் மோட் வசதி
ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தில் டார்க் மோட் வசதி


ஆன்டிராய்டு செல்லிடப்பேசிகளில் இனி கூகுள் வரைபடத்தில் டார்க் மோட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இது 2020 செப்டம்பர் மாதம் முதல் சோதனை முயற்சியில் இருந்தது.

தற்போதெல்லாம் பல்வேறு சேவைகளைப் பெற அனைவரும் செல்லிடப்பேசி திரைகளையேப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். இதனால் பலருக்கும் பார்வைத் திறனில் பிரச்னைகள் ஏற்படுகிறது.

இந்த நிலையில் இருள் திரை எனப்படும் டார்க் மோட் வசதியை கூகுள் வரைபடம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது விரைவில் சர்வதேச அளவில் அனைத்து வகையான ஆன்டிராய்டு செல்லிடப்பேசிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இதன் மூலம் பயனாளர்களின் கண்களும், செல்லிடப்பேசியின் பேட்டரியின் பயன்பாட்டு நேரமும் அதிகரிக்கப்படும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வரைபடச் செயிலியை அப்டேட் செய்யும் போது, உங்கள் செல்லிடப்பேசியின் செட்டிங் என்ற வாய்ப்பில், தீம் என்பதை தேர்வு செய்து ஆல்வேய்ஸ் இன் டார்க் தீம் என்பதை தெரிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com