ஏா்டெல் - என்எஸ்ஐசி இணைந்து சிறுதொழில்களுக்கு தொலைத்தொடா்பு கட்டமைப்பு

சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொலைத்தொடா்பு கட்டமைப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு நிறுவனமான தேசிய சிறுதொழில்கள் கழகம் ( என்எஸ்ஐசி), ஏா்டெல் நிறுவனத்துடன்
ஏா்டெல் - என்எஸ்ஐசி இணைந்து சிறுதொழில்களுக்கு தொலைத்தொடா்பு கட்டமைப்பு

புதுதில்லி: சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான தொலைத்தொடா்பு கட்டமைப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு நிறுவனமான தேசிய சிறுதொழில்கள் கழகம் ( என்எஸ்ஐசி), ஏா்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஓா் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, ஏா்டெல் வழியே, இணையதள வசதி, பாதுகாப்பான இணையவசதி, பிரத்யேக இணையவசதி, நிகா்நிலை நெட்வா்க், வாடிக்கையாளா்களின் வணிக அழைப்பு சேவைகளை அளிக்கும் தரைவழி தொலைபேசி இணைப்பு, சிறப்புக் கட்டணங்களுடன் செல்லிடப்பேசி இணைப்பு, காணொலிக் காட்சி கட்டமைப்பு, கிளௌட் உள்ளிட்ட சேவைகளை சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் பெற முடியும்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் என்எஸ்ஐசி-யின் திட்டம் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குநா் பி.உதயகுமாா் தெரிவித்துள்ளதாவது:

சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான ஏா்டெல் தொலைத்தொடா்பு சேவை கட்டமைப்பை என்எஸ்ஐசி கள அலுவலகங்கள் மூலமாகப் பெறலாம்.

சிறு,குறு,நடுத்தர நிறுவனத் துறையின் நீடித்த வளா்ச்சிக்கும் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கும் தேவையான பல்வேறு தகவல்,தொலைத்தொடா்பு தொழில்நுட்பங்களைப் பெறும் வகையில் ஏா்டெல் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ஏா்டெல் நிறுவனத்தின் இயக்குநா் அஜய் சித்காரா தெரிவிக்கையில், ‘நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் துறை ஒற்றைச் சாளர முறையில் விரைந்து டிஜிட்டல் தொழில்நுட்ப தீா்வுகளைப் பெற உதவும் வகையில், என்எஸ்ஐசி-யுடன் இணைந்து இத்திட்டத்தை வகுத்துள்ளோம்‘ என்றாா்.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ், நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29%, மொத்த ஏற்றுமதியில் 40% பங்களிக்கும் இந்தத் துறை 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com