டாடாவின் புதிய ஆல்ட்ராஸ் ரகம் அறிமுகம்

தனது ஆல்ட்ராஸ் ரகக் கார்களின் புதிய ரகத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
டாடாவின் புதிய ஆல்ட்ராஸ் ரகம் அறிமுகம்

புது தில்லி: தனது ஆல்ட்ராஸ் ரகக் கார்களின் புதிய ரகத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய ரகத்தில், 1.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட டர்போசார்ஜ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1.2 லிட்டர் பை}டர்போசார்ஸ் ஆற்றல் கொண்ட பெட்ரோல் என்ஜினுடன் புதிய வகை ஆல்ட்ராஸ் ரகக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கார்களின் விற்பனை அடுத்த வாரம் முதல் தொடங்கும்.

110 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தும் இந்தக் கார், 12 விநாடிகளுக்குள் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கி.மீ. வேகமெடுக்கும் திறன் கொண்டது. நிறுவனம் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட ஆல்ட்ராஸ் கார்களை ஏற்கெனவே விற்பனை செய்து வருகிறது. எனினும் அந்தக் கார்கள் 86 பிஎஸ் சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகின்றன.

1.5 லிட்டர் டீசல் ரக ஆல்ட்ராஸ் கார்கள் 90 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்துகின்றன.

இந்தப் புதிய ரகத்தின் விலை வரும் 22}ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com