விப்ரோ லாபம் 21% உயா்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயா்ந்துள்ளது.
wipro084810
wipro084810


புது தில்லி: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், நிறுவனம் ரூ.2,968 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2455.9-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் அது 21 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டின் அடிப்படையில் நிகர லாபத்தைக் கணக்கிடும்போது, முந்தைய 3 மாதங்களைவிட டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது, கடந்த 36 காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com