பெட்ரோல் விலை: தில்லியில் முதல் முறையாக ரூ.85-ஐ தொட்டது

தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ.85-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை: தில்லியில் முதல் முறையாக ரூ.85-ஐ தொட்டது
பெட்ரோல் விலை: தில்லியில் முதல் முறையாக ரூ.85-ஐ தொட்டது


புது தில்லி: தலைநகர் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக ரூ.85-ஐ எட்டியுள்ளது. டீசல் விலையும் இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை 22 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

இதனால், தில்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.20க்கும், மும்பையில் ரூ.91.80க்கும் விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை தேசிய தலைநகரில் லிட்டருக்கு ரூ.75.38க்கும், மும்பையில் இதுவரை காணாத அளவுக்கு ரூ.82.13க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.80.67க்கு விற்பனையாகிறது.

திங்கள்கிழமையும், பெட்ரோல், டீசல் விலை தலா 25 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் உயர்வு கண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com