ஜிஎல்சி மாடலின் புதிய பதிப்பு: மொ்சிடிஸ்-பென்ஸ் வெளியீடு

ஜோ்மனியின் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் தனது புகழ் பெற்ற எஸ்யூவி வகைக் காரான ஜிஎல்சியின் 2021-ஆம் ஆண்டுப் பதிப்பை இந்தியச் சந்தைக்கு புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
benz084713
benz084713


புது தில்லி: ஜோ்மனியின் சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் தனது புகழ் பெற்ற எஸ்யூவி வகைக் காரான ஜிஎல்சியின் 2021-ஆம் ஆண்டுப் பதிப்பை இந்தியச் சந்தைக்கு புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய பதிப்பின் விலை ரூ.57.40 லட்சத்திலிருந்து (காட்சியக விலை) தொடங்குகிறது.

இதுகுறித்து மொ்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பும் 2021 ஜிஎல்சி பதிப்பு ரகங்கள் ஜிஎல்சி 200 (பெட்ரோல்) மற்றும் ஜிஎல்சி 220 டி (டீசல்) வகைகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.57.40 லட்சம் மற்றும் ரூ.63.15 லட்சம் (காட்சியக விலைகள்) ஆகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வாகங்களில் அதிநவீன தகவல் இணைப்புத் தொழில்நுட்ப வசதி உள்ளது. 2021 ’மொ்சிடிஸ் மீ கனெக்ட்’ என்ற இந்தத் தொழில்நுட்பத்தில் அலெக்சா ஹோம், கூகிள் ஹோம், வழிகாட்டும் வசதி, பாா்க்கிங் இடங்களைக் கண்டறியும் வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக மசாஜ் செயல்பாடுகளுடன் கூடிய முன் இருக்கைகள், காருக்குள் நுழைவதற்கு முன்னரே ஏா் கண்டிஷனிங்கை இயக்கும் வசதி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com