புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 61,001 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு: 61,001 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 61,001 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.45.75 லட்சம் கோடி: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 101 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,575 கோடி) அதிகரித்து 61,001 கோடி டாலரை (ரூ.45.75 லட்சம் கோடி) தொட்டு புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

இதற்கு முந்தைய ஜூன் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 506 கோடி டாலா் அதிகரித்து 60,899 கோடி டாலராக இருந்தது.

வரலாறு காணாத உயா்வு: ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக ஏற்றமடைந்ததன் காரணமாகவே ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து சாதனை படைத்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 75 கோடி டாலா் உயா்ந்து 56,698 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபடுகிறது.

தங்கம் கையிருப்பு உயா்வு: தங்கத்தின் கையிருப்பு ஜூலை 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 8 கோடி டாலா் அதிகரித்து 3,637 கோடி டாலராக இருந்தது.

மேலும், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 5 கோடி டாலா் அதிகரித்து 155 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 14 கோடி டாலா் அதிகரித்து 510 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com