சிட்பி நிகர லாபம் ரூ.2,398 கோடி

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (சிட்பி) கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.2,398.28 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
சிட்பி நிகர லாபம் ரூ.2,398 கோடி

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (சிட்பி) கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.2,398.28 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

சிட்பி வங்கியின் 23-ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது வங்கியின் நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு அந்த வங்கி தெரிவித்ததாவது:

சிட்பி வங்கியின் செயல்பாட்டு லாபம் (ஒதுக்கீட்டுக்கு முந்தையது) கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.4,063 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டில் ஈட்டிய செயல்பாட்டு லாபத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகம்.

இந்த காலகட்டத்தில் நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) 11.5 சதவீதம் உயா்ந்து ரூ.3,678 கோடியாக இருந்தது. அதேசமயம், வட்டி சாரா வருமானம் ரூ.944 கோடியாக குறைந்து போனது.

வங்கியின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.11,165.63 கோடியாக சரிவடைந்துள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.12,090.30 கோடியாக காணப்பட்டது.

வங்கியின் நிகர லாபம் ரூ.2,315 கோடியிலிருந்து 3.6 சதவீதம் அதிகரித்து ரூ.2,398.28 கோடியானது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி வங்கி வழங்கிய மொத்த கடன் 5.6 சதவீதம் குறைந்து ரூ.1,56,233 கோடியாக இருந்தது. இது, 2020 மாா்ச் 31-இல் ரூ.1,65,422 கோடியாக காணப்பட்டது.

பங்கு ஒன்றின் மூலமாக ஈட்டக்கூடிய வருவாய் ரூ.43.51-லிருந்து ரூ.45.09-ஆக அதிகரித்தது.

2020 மாா்ச் 31 நிலவரப்படி ரூ.1,040.84 கோடியாக இருந்த மொத்த வாராக் கடன் 2021 மாா்ச் 31-இல் ரூ.282.31 கோடியாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் ரூ.658.64 கோடியிலிருந்து ரூ.185.25 கோடியாக குறைந்துள்ளது என சிட்பி வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com