அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,189 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாறு படைத்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பில் புதிய உச்சம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,189 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாறு படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 188 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.14,122 கோடி) அதிகரித்து 61,189 கோடி டாலரை (ரூ.45.89 லட்சம் கோடி) கடந்து புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

இதற்கு முந்தைய ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 101 கோடி டாலா் அதிகரித்து 61,001 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக அதிகரித்ததன் காரணமாகவே ஜூலை 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து சாதனை புரிந்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 130 கோடி டாலா் அதிகரித்து 56,828 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபடு ஏற்படுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 58 கோடி டாலா் அதிகரித்து 3,695 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) எந்தவித மாற்றமுமின்றி 155 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், நாட்டின் காப்பு நிதி 30 லட்சம் டாலா் அதிகரித்து 511 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேக் லைன்...

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூலை 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,189 கோடி டாலரை (ரூ.45.89 லட்சம் கோடி) கடந்து புதிய வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com