'யூ ட்யூப் மியூசிக்' தளத்தில் புதிய அம்சம்!

யூ ட்யூப் மியூசிக் 'ரீப்ளே மிக்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
'யூ ட்யூப் மியூசிக்' தளத்தில் புதிய அம்சம்!

யூ ட்யூப் மியூசிக் 'ரீப்ளே மிக்ஸ்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி கடந்த சில வாரங்களில் பயனர்களால் அதிகம் இசைக்கப்பட்ட பாடல்கள் சேமிக்கப்படும். 

யூ ட்யூப் மியூசிக் தளத்தில் 'மிக்ஸ்டு ஃபார் யு' (Mixed for you) என்ற பிரிவில் உள்ள இந்த பாடல்களை தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் கேட்கலாம். 

இதில் 100 பாடல்கள் வரை சேமிக்க முடியும், இதில் ஆட்டோபிளே வசதியும் உள்ளது. 

கடந்த ஓரிரு வாரங்களில் நீங்கள் அதிகம் கேட்ட பாடல்களின் தொகுப்பாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரெடிட் தளத்தில் உள்ள பல பயனர்களால் இது கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com