2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வெளியாகும் ஒன்பிளஸ் 9 சீரிஸ்

ஒன்-பிளஸ் 9 சீரிஸில் வெளியாகும் ஸ்மார்ட் போன்கள் 2 ஆண்டுகள் உத்திரவாதத்துடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வெளியாகும் ஒன்பிளஸ் 9 சீரிஸ்

ஒன்-பிளஸ் 9 சீரிஸில் வெளியாகும் ஸ்மார்ட் போன்கள் 2 ஆண்டுகள் உத்திரவாதத்துடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒன்-பிளஸ் 9, ஒன்-பிளஸ் 9 லைட், ஒன்-பிளஸ் 9 ப்ரோ ஆகியவை இரண்டு ஆண்டுகள் உத்திரவாதத்துடன் மார்ச் 23-ம் தேதி வெளியாகிறது.

சீனாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒன்-பிளஸ் நிறுவனத்தின் செல்போன்கள் இந்திய சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

அந்தவகையில் ஒன்-பிளஸ் 9 சீரிஸில் வெளியாகும் செல்போன்கள் 2 ஆண்டுகள் நீடித்த உத்தரவாதத்துடன் வெளியாகும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி பிடே லாவ் தெரிவித்துள்ளார்.

ஒன்-பிளஸ் 9 சீரிஸ் செல்போன்கள் 65W வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வெளியாகிறது. ஒன்-பிளஸ் 9 மற்றும் ஒன்-பிளஸ் 9 ப்ரோ ஆகியவை 4,500 mAh பேட்டரி அம்சத்துடன் சந்தைக்கு வருகிறது.

ஒன்-பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன், இதற்கு முந்தையை ஒன்-பிளஸ் 8T சிறப்பம்சங்களை ஒத்துள்ளது. எனினும் இதில் 65W வார்ப் சார்ஜிங் அம்சம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஒன்-பிளஸ் 9 லைட் ஸ்னாப்டிராகன் 865 உடனும், ஒன்-பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ ஆகியவை ஸ்னாப்டிராகன் 888 உடன் வருகிறது. இவை 8GB RAM மற்றும் 128 உள்ளக நினைவகத்தையும், கொண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com