ஸியோமி: சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள எம்.ஐ. 11 சீரிஸ்

எம்.ஐ. 11 அல்ட்ரா, எம்.ஐ. 11 புரோ, எம்.ஐ. 11 லைட் ஆகிய மூன்று 5-ஜி ஸ்மார்ட் போன்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளன.
சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள எம்.ஐ. 11 சீரிஸ்
சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள எம்.ஐ. 11 சீரிஸ்

ஸியோமி நிறுவனத்தில் எம்.ஐ. 11 அல்ட்ரா, எம்.ஐ. 11 புரோ, எம்.ஐ. 11 லைட் ஆகிய மூன்று 5-ஜி ஸ்மார்ட் போன்கள் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளன.

இதில் எம்.ஐ. 11 புரோவில் இதுவரை இல்லாத வகையில் பின்புறமும் தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸியோமி நிறுவனத்தின் ஸ்மார் போன்கள் இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இந்நிலையில் அந்நிறுவனம் எம்.ஐ. 11 சீரிசில், எம்.ஐ. 11 அல்ட்ரா, எம்.ஐ. 11 புரோ, எம்.ஐ. 11 லைட் கூடுதல் அம்சங்களுடன் மூன்று ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

எம்.ஐ. 11 லைட் ஸ்மார்ட் போன், முதல்முறையாக குவால்கம் ஸ்னாப்டிராகன் 780ஜி பிராசசருடன் அறிமுகமாகியுள்ளது. இது 8GB RAM மற்றும் 256GB உள்நினைவகமும் கொண்டது. 512GB கூடுதல் நினைவகம் பொருத்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதில், 20MP முன்பக்கக் கேமராவும், 64MP, 8MP, 5 MP என மூன்று குவியங்களுடன் கூடிய பின்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4,250mAh திறன் கொண்ட பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது.

எம்.ஐ. 11 புரோ, இதற்கு முன்பு வெளிவந்த எம்.ஐ. 11 மாடலை தழுவி மேம்படுத்தப்பட்டுள்ளது. 6.81 அங்குல தொடுதிரையுடன், கொரில்லா கண்ணாடியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஐ. 11 புரோ 8GB - 12GB RAM வகையிலும், 128GB - 256GB உள்நினைவக வகையிலும் வெளியாகியுள்ளது. மேலும், இதன் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள 5,000mAh திறன் கொண்ட வையர்லெஸ் ரீசார்ஜிங் பேட்டரி கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. 

எம்.ஐ. 11 அல்ட்ரா வகை ஸ்மார்ட் போனில், ஸ்னாப்டிராகன் 888 பிராசசர், 5,000mAh திறன் கொண்ட வயர்லெஸ் சார்ஜிங் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த வகை செல்போன்களிலிருந்து மற்ற செல்போன்களுக்கும் சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதன் சிறப்பம்சம். இதில், 50MP, 48MP, 48MP ஆகிய மூன்று குவியங்களுடன் பின்பக்க கேமராவும், 20MP முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com