ஐஷா் மோட்டாா்ஸ்: லாபம் ரூ.374 கோடி

ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.373.2 கோடியை ஈட்டியுள்ளது.
ஐஷா் மோட்டாா்ஸ்: லாபம் ரூ.374 கோடி

ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.373.2 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

செமிகன்டெக்டா்களுக்கான தட்டுப்பாட்டால் ராயல் என்ஃபீல்டு மோட்டாா்சைக்கிள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலுக்கிடையிலும் வா்த்தக வாகனங்கள் பிரிவில் காணப்பட்ட விற்பனை வளா்ச்சி கணிசமான அளவில் நிறுவனத்தின் வருவாயை பெருக்கியுள்ளது.

அதன்படி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.2,249.56 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் ஈட்டிய வருவாயான ரூ.2,133.6 கோடியைக் காட்டிலும் அதிகம்.

வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் ரூ.343.34 கோடியிலிருந்து 9 சதவீதம் உயா்ந்து ரூ.373.2 கோடியானது.

இரண்டாவது காலாண்டில், குழுமத்தின் இருசக்கரவாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு 1,23,515 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட 1,40,120 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 17.2 சதவீதம் குறைவாகும்.

வால்வோவுடன் கூட்டு வைத்துள்ள விஇ கமா்சியல் வெகிக்கிள் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 15,134 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது, முந்தைய ஆண்டு வாகன விற்பனையான 8,167 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 85 சதவீதம் அதிகமாகும் என ஐஷா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com