ஏர்டெல் வரிசையில் வோடஃபோன் ஐடியா: 20, 25 சதவிகிதம் கட்டண உயர்வு

வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் கால் மற்றும் டேட்டா கட்டணங்களை 20-25 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.
ஏர்டெல் வரிசையில் வோடஃபோன் ஐடியா: 20, 25 சதவிகிதம் கட்டண உயர்வு


வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் கால் மற்றும் டேட்டா கட்டணங்களை 20-25 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது.

இது நவம்பர் 25 முதல் நடைமுறைக்கு வரும் என அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

குறைந்தபட்ச ரீசார்ஜாக 28 நாள்களுக்கு ரூ. 79 ஆக இருந்த கட்டணம் 25.31 சதவிகிதம் உயர்த்தி ரூ. 99 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அன்லிமிடெட் திட்டங்களில் 20-23 சதவிகிதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

28 நாள்களுக்கான ஒருநாள் டேட்டா 1 ஜிபி வரையிலான திட்டம் தற்போது ரூ. 219 ஆக உள்ளது. நவம்பர் 25 முதல் இது ரூ. 269 ஆக உயருகிறது. மேலும் 84 நாள்களுக்கான ஒருநாள் டேட்டா 1.5 ஜிபி வரையிலான திட்டம் ரூ. 599-இல் இருந்து ரூ. 719 ஆக உயருகிறது. இதே வசதிகள் அடங்கிய 365 நாள்களுக்கான திட்டம் 20.8 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான கட்டணம் ரூ. 2,399 ஆக உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, வோடஃபோன் ஐடியா நிறுவனமும் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com