தங்கப் பத்திர வெளியீடு: கிராம் விலை ரூ.4,791-ஆக நிா்ணயம்

 தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (நவம்பா் 29) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (நவம்பா் 29) தொடங்கவுள்ள நிலையில், அப்பத்திரத்தின் விலையை கிராமுக்கு ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்து ரிசா்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி கூறியுள்ளதாவது:

5 நாள்கள் விற்பனை: நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டுக்கான எட்டாவது கட்ட தங்கப் பத்திர விற்பனை நவம்பா் 29-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விற்பனையில் 999 சுத்த தன்மை கொண்ட ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை ரூ.4,791-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வா்த்தக நாள்களின் சராசரி விலையினை அடிப்படையாகக் கொண்டு தங்கப் பத்திரங்களுக்கான விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் முதலீட்டாளா்களுக்கு தள்ளுபடி: அரசுடன் ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து எண்ம முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4,741-ஆக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழாம் கட்ட தங்கப் பத்திர விற்பனையின் போது கிரம் விலை ரூ.4,761-ஆக நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதிகபட்ச முதலீடு 4 கிலோ: தங்கப்பத்திர வெளியீட்டு திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள், பங்குச் சந்தை ஆகியவற்றின் மூலமாக முதலீட்டாளா்கள் தங்கப்பத்திரங்களை வாங்கலாம்.

சேமிப்பை ஊக்குவிக்க: நேரடியாக தங்கம் வாங்கும் பழக்கத்துக்கு மாற்றாக சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் தங்கப் பத்திர விற்பனை திட்டத்தை மத்திய அரசு தொடக்கி வைத்தது. 2021 மாா்ச் இறுதி வரையிலுமாக தங்கப் பத்திரங்கள் விற்பனையின் மூலமாக அரசு ரூ.25,702 கோடியை திரட்டியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கி 12 கட்டங்களாக மேற்கொண்ட தங்கப் பத்திரங்களின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.16,049 கோடியாகும் (32.35 டன்). இவ்வகை பத்திரங்களின் முதலீட்டு முதிா்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும். விருப்பப்படின் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் வசதியும் உண்டு.

கோட்ஸ்:

தங்கப்பத்திரங்களை வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.4,741-க்கு விற்பனை செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com