
இன்ஸ்டாகிராமில் பதின் பருவ பயனாளர்களுக்கு சிறப்பு அம்சம்
சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய சில உள்ளடக்கங்களை தவிர்க்கும் வகையில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்யவுள்ளது.
வளரிளம் பருவத்தினர் அல்லது பதின்பருவத்தினர் தங்களது வயதுக்கு மீறிய தீய உள்ளடக்கங்களை தவிர்க்கும் வகையில் இந்த அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்கிறது.
முகநூலில் தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது எதிர்மறையான புகைப்படம், விடியோ போன்ற உள்ளடக்கங்களை தவிர்க்கும் வசதி உள்ளது.
இதனைப்போன்றே புகைப்படங்கள் அல்லது விடியோக்களை மட்டுமே பதிவிடும் இன்ஸ்டாகிராம் செயலியில் பதின் பருவத்தினரை தீய உள்ளடக்கங்களிலிருந்து காக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகிறது.
படிக்க | வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் 6.5%-ஆக குறைப்பு: பேங்க் ஆஃப் பரோடா
இன்ஸ்டாகிராம் எதிர்மறையான எண்ணங்களை இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் உருவாக்குவதாக அமெரிக்காவை சேர்ந்த தரவு பொறியாளரான ஃபிரான்சிஸ் ஹவுஜென் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கண்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் வயதுக்கு மீறிய அவசியமற்ற உள்ளடக்கங்களை தடை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக 'டேக் எ பிரேக்' என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் வளரிளம் பருவத்தினர் கணக்குகளில் இருந்து முற்றிலும் தவிர்க்கப்படும்.