ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் ரூ.519 கோடி

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.519.12 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
ராம்கோ சிமென்ட்ஸ் லாபம் ரூ.519 கோடி

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.519.12 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

விற்பனை அதிகரிப்பின் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 18.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,510.33 கோடியைத் தொட்டது. அதேசமயம், முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.1,273.47 கோடியாக காணப்பட்டது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செலவினம் ரூ.930.85 கோடியிலிருந்து 32.31 சதவீதம் அதிகரித்து ரூ.1,231.60 கோடியானது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.238.92 கோடியிலிருந்து ரூ.519.12 கோடியானது. முந்தைய நிதியாண்டின் காலாண்டுடன் ஒப்பிடும்போது லாபம் இரு மடங்கு அதிகம் என ராம்கோ சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் ராம்கோ சிமென்ட்ஸ் பங்கின் விலை 2.02 சதவீதம் குறைந்து ரூ.944.15-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com