உச்சம் தொட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், மும்பை பங்கு சந்தையில் 3.65 சதவிகிதம் உயர்ந்து 2,377.50 ரூபாய்க்கு வணிகமானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உள்ளூர் தேடுபொறி தளமாக உள்ள ஜஸ்ட் டயலின் பெரும்பான்மை பங்கினை, ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் உச்சம் தொட்டுள்ளது. அதன் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 3.65 சதவிகிதம் உயர்ந்து 2,377.50 ரூபாய்க்கு வணிகமானது.

ஜஸ்ட் டயலின் 41 சதவிகித பங்களை வாங்கியதன் மூலம் அதனை நிர்வகிக்கும் பொறுப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

நாட்டின் விலைமதிக்கத்தக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 15 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஜூலை 20ஆம் தேதி, ஜஸ்ட் டயலின் ஒரு பங்கு 10 ரூபாய்க்கு விற்பனையானது. அதை, ஒரு பங்கின் விலை 1,020 ரூபாய் என்ற வீதத்தில் 1.31 கோடி பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜூன் மாதம் அறிவித்ததிலிருந்து அந்நிறுவனத்தின் பங்கு தொடர் ஏறுமுகத்தில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன் பங்குகள் உயர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com