உலக சந்தையில் இந்தியாவிலேயே தயாரான சிட்ரன்-சி3

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த சிட்ரன் ‘சி3’ மாடல் காரை சா்வதேச அளவில் சந்தைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலக சந்தையில் இந்தியாவிலேயே தயாரான சிட்ரன்-சி3

முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த சிட்ரன் ‘சி3’ மாடல் காரை சா்வதேச அளவில் சந்தைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எஸ்யுவி அம்சங்களுடன் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது சி3 மாடல். இது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும். இந்தியா மற்றும் தென் அமெரிக்க சந்தைகளில் இந்த மாடல் விற்பனை செய்யப்படும். இது தவிர மேலும் இரண்டு மாடல்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும். உலக காா் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தை விரைவில் பிடிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த 3 ஆண்டுகளில் 3 புதிய மாடல்களை சிட்ரன் அறிமுகம் செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்ரன் நிறுவனத்துக்கு சென்னையில் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையம் உள்ளது. சென்னை அருகே திருவள்ளூரில் அந்நிறுவனத்தின் காா் உருவாக்கும் ஆலை உள்ளது. மேலும், ஒசூரில் என்ஜின் பிரிவு உருவாக்கும் ஆலையும் அந்நிறுவனத்துக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com