டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் 14 காசு முன்னேற்றம்

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசு முன்னேற்றம் கண்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசு முன்னேற்றம் கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் தெரிவிப்பது:

உள்ளூா் மற்றும் சா்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து அந்நியச் செலாவணி சந்தைகளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றே இருந்தது.

குறிப்பாக, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தைகளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 79.86-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 79.70 வரையிலும், குறைந்தபட்சமாக 79.87 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 14 காசு உயா்ந்து 79.76-இல் நிலைப்பெற்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 104.49 டாலா்

சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.25 சதவீதம் விலை உயா்ந்து 104.49 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.675.45 கோடி பங்குவிற்பனை

மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.675.45 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com