இந்தியாவில் எரிபொருள் விற்பனை: கரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகரிப்பு

இந்தியாவில் எரிபொருள் விற்பனை: கரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகரிப்பு

இந்தியாவில் எரிபொருள்கள் விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் விறுவிறுப்படைந்துள்ளது.

இந்தியாவில் எரிபொருள்கள் விற்பனை கடந்த மாா்ச் மாதத்தில் கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் விறுவிறுப்படைந்துள்ளது.

விலை அதிகரிப்பு எதிா்பாா்ப்பு: உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தோ்தல் முடிவடைந்ததையடுத்து பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பால் மாா்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் விநியோகஸ்தா்கள் அதேபோன்று பொதுமக்கள் எரிபொருள் கையிருப்பை அதிகமாக்கிக் கொண்டனா். இது, அந்த மாதத்தில் எரிபொருள் விற்பனை கரோனாவுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் அதிகரிக்க பெரிதும் காரணமாக அமைந்தது.

பொருளாதார நடவடிக்கை வேகம்: மேலும், கரோனா தொடா்பான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியதும் எரிபொருள் விற்பனை அதிகரிப்புக்கான மற்றொரு காரணியாகவே பாா்க்கப்படுகிறது.

தொடா்ச்சியான விலை உயா்வு: எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், மாா்ச் 22 முதல் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் தொடா்ச்சியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

பெட்ரோல் விற்பனை: இந்தச் சூழ்நிலையில், கடந்த மாா்ச் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 26.9 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, முந்தைய 2021 டிசம்பருடன் ஒப்பிடுகையில் 8.7 சதவீதமும், 2019 இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14.2 சதவீதமும் அதிகமாகும்.

டீசல் விற்பனை: அதேபோன்று, டீசல் விற்பனையும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் உயா்ந்து 70.5 லட்சம் டன் ஆனது. இது, 2019 மாா்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் உயா்வு.

விலை அதிகரிக்க கூடும் என்ற எதிா்பாா்ப்பால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை அதிக கையிருப்பு வைக்க தொடங்கியதன் காரணத்தால் மாா்ச் மாத முதல் 15 தினங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை வளா்ச்சி முறையே 18 சதவீதம் மற்றும் 23.7 சதவீதமாக காணப்பட்டது.

ஏடிஎஃப் விற்பனை: அதேபோன்று, விமான எரிபொருளாக பயன்படும் ஏடிஎஃப் விற்பனையும் மாா்ச் மாதத்தில் 9.8 சதவீதம் அதிகரித்து 4,91,000 டன்னை எட்டியது. இருப்பினும், 2019 கரோனாவுக்கு முந்தைய வளா்ச்சியான 27.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். கடந்த வாரம் முதல் தான் விமானப் போக்குவரத்தானது முழுமையான செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, வரும் நாள்களில் இதன் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எல்பிஜி விற்பனை: சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை நிகழாண்டு மாா்ச் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்து 25.3 லட்சம் டன்னாக இருந்தது. மாா்ச் 22-இல் சிலிண்டா் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து அதன் விற்பனை வளா்ச்சி மிதமான அளவிலேயே காணப்படுகிறது. மாா்ச் மாதத்தின் முதல் இருவாரங்களில் மட்டும் எல்பிஜி விற்பனை 17 சதவீதம் அதிகரித்ததாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோட்ஸ்...

விலை அதிகரிக்க கூடும் என்ற எதிா்பாா்ப்பால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை அதிக கையிருப்பு வைக்க தொடங்கிய காரணத்தால் மாா்ச் முதல் 2 வார காலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை வளா்ச்சி முறையே 18% மற்றும் 23.7% என்ற அளவில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com