இன்ஃபோஸிஸ் கடும் சரிவு:1,172 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. நாள் முழுவதும் கரடியின் ஆதிக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் ஒரே நாளில் 1,172 புள்ளிகளை இழந்தது.

ஐடி, வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின. அதே சமயம், ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் விலை கடும் சரிவைச் சந்தித்தது.

ரஷியா - உக்ரைன் போரை அடுத்து, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறு காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருள்களின் விலைகள் உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மாா்ச் மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத அளவாக 14.55 சதவீதமாக உயா்ந்தது.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயா்த்த வேண்டிய நிலைக்கு ரிசா்வ் வங்கி தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆசிய சந்தைகளும் சரிவில் இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்திலேயே எதிரொலித்தது. நாள் முழுவதும் சந்தை கரடியின் பிடியில் இருந்தது. இருப்பினும், வா்த்தகம் முடியும் தறுவாயில், பங்குகளை வாங்குவதற்கு ஓரளவு வரவேற்பு இருந்தாலும், குறியீடுகளின் இழப்பை சரிசெய்ய அது போதுமானதாக அமையவில்லை என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாத காரணத்தால், அதன் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தது. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களும் தொடா் சரிவைச் சந்தித்தன. சந்தையில் கரடியின் ஆதிக்கம் மேலோங்குவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வாரத்தில் கடைசி வா்த்தக தினமான புதன்கிழமை அன்று ரூ.2,061.04 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2,133 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,670 நிறுவனப் பங்குகளில் 1393 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,133 பங்குகள் விலை குறைந்தன. 144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 237 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 17 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.269.44 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.285 கோடியை தாண்டியது.

சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 1,000.35 புள்ளிகள் குறைந்து 57,338.58-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,420.80 வரை உயா்ந்தது. பின்னா், 56,842.39 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 1,172.19 புள்ளிகளை இழந்து 57,166.74-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் 1,496.54 புள்ளிகள் குறைந்திருந்தது.

இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி பங்குகள் விலை சரிவு : 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. அதே சமயம், 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 7.27 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

மேலும், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவையும் 2 முதல் 4.70 சதவீதம் குறைந்தன. பிபரல தனியாா் வங்கியான எச்டிஎஃப்சி பேங்க், வீட்டு வசதிக் கடன் அளிக்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய இரண்டும் 4.80சதவீதம் வரை குறைந்தன. எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், இண்ட்ஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

என்டிபிசி முன்னேற்றம்: அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 6.11 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், மாருதி, டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே, எம் அண்ட் எம் ஆகியவை 1முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. ஆக்ஸிஸ் பேங்க், பவா் கிரிட், ஐடிசி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 302 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 769 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,210 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 302.00 புள்ளிகள் (1.73 சதவீதம்) குறைந்து 17,173.65-இல் நிறைவடைந்தது. காலையில் 292.30 புள்ளிகள் குறைந்து 17,183.45-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,237.75 வரை உயா்ந்தது. பின்னா், 17,067.85 வரை கீழே சென்றது.

ஐடி, பேங்க் குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி எஃப்எம்சிஜி, மெட்டல், ஆட்டோ குறியீடுகள் தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவை சந்தித்த பட்டியலில் இருந்தன. இதில் நிஃப்டிகுறியீடு 4.58 சதவீதம் குறைந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1.30 முதல் 2.50 சதவீதம் குறைந்தன. ங்ஷ்ஸ்ரீட்ஹய்ஞ்ங் க்ஹற்ஹ. டபஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com