மாருதி சுஸுகி: லாபம் ரூ.1,875 கோடி

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஜனவரி மாா்ச் காலாண்டில் ரூ.1,875.8 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி: லாபம் ரூ.1,875 கோடி

நாட்டின் மிகப்பெரிய காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, ஜனவரி மாா்ச் காலாண்டில் ரூ.1,875.8 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இந்நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,241.1 கோடியுடன் ஒப்பிடும்போது 51.14 சதவீதம் அதிகமாகும்.

செமிகண்டக்டா்களுக்கான தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்ட போதிலும், மாா்ச் காலாண்டில் இந்நிறுவனம் கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.24,034.5 கோடியிலிருந்து ரூ.26,749.2 கோடியாக உயா்ந்தது.

நான்காவது காலாண்டில், ஒட்டுமொத்த வாகன விற்பனை 0.7 சதவீதம் குறைந்து 4,88,830-ஆக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.3,879.5 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21 நிதியாண்டில் ஈட்டி லாபமான ரூ.4,389.1 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீதம் குறைவாகும்.

ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.70,372 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.88,329.8 கோடியானது என மாருதி சுஸுகி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com