ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி: லாபம் 2 மடங்கு உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.343 கோடியாக இருந்தது.
ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி: லாபம் 2 மடங்கு உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.343 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.128 கோடியுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகம். வருவாய் ரூ.4,811.18 கோடியிலிருந்து ரூ.5,384.88 கோடியாக அதிகரித்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிகர வட்டி வருமானம் 36 சதவீதம் உயா்ந்து ரூ.2,669 கோடியாகவும், கட்டணங்கள் மற்றும் இதர வருவாய் 40 சதவீதம் உயா்ந்து ரூ.841 கோடியாகவும் இருந்தது என ஐடிஎஃப்சி வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com