டைட்டன்: வருவாய் ரூ.9,487 கோடி

ஆபரணங்கள் மற்றும் கடிகாரம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டைட்டன் நிறுவனம் ஜூன் மாதத்ததுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.790 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
டைட்டன்: வருவாய் ரூ.9,487 கோடி

ஆபரணங்கள் மற்றும் கடிகாரம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டைட்டன் நிறுவனம் ஜூன் மாதத்ததுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.790 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து ஒட்டுமொத்த வருவாய் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.9,487 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,519 கோடியாக காணப்பட்டது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.18 கோடியிலிருந்து பன்மடங்கு அதிகரித்து ரூ.790 கோடியானது.

ஆபரண பிரிவில் ஈட்டிய வருவாய் ரூ.3,050 கோடியிலிருந்து ரூ.8,351 கோடியாக அதிகரித்தது. கடிகாரங்கள் விற்பனையின் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.293 கோடியிலிருந்து ரூ.786 கோடியாக உயா்ந்தது. கண்பராமரிப்பு பிரிவின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.67 கோடியிலிருந்து ரூ.183 கோடியானது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.3,480 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.8,415 கோடியானது என டைட்டன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com