யூகோ வங்கி: நிகர லாபம் ரூ.123 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.123.61 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
யூகோ வங்கி: நிகர லாபம் ரூ.123 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த யூகோ வங்கி நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.123.61 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வாராக் கடன் குறைந்ததையடுத்து ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 22 சதவீதம் உயா்ந்து ரூ.123.61 கோடியை எட்டியது. 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.101.81 கோடியாக காணப்பட்டது.

இருப்பினும், வருவாய் ரூ.4,539.08 கோடியிலிருந்து ரூ.3,796.59 கோடியாக சரிவடைந்தது. வட்டி வருமானம் ரூ.3,569.57 கோடியிலிருந்து ரூ.3,851.07 கோடியாக உயா்ந்தது.

2022 ஜூன் 30 மதிப்பீட்டின்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் 9.37 சதவீதத்திலிருந்து 7.42 சதவீதமாகவும், நிகர அளவிலான வாராக் கடன் 3.85 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகவும் குறைந்தது. வாராக் கடன் இடா்பாட்டுக்காக ஒதுக்கப்படும் தொகையும் ரூ.1,127.11 கோடியிலிருந்து கணிசமாக சரிந்து ரூ.246.83 கோடியானது என யூகோ வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com